பென்ஷனுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் – அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!
பென்ஷனுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்புகளை அமுல்படுத்த வேண்டும், பஞ்சப்படி உயர்வுக்கு உடனே தீர்வு கான வேண்டும், 2003 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின், திருச்சி காரைக்குடி புதுக்கோட்டை மண்டல ஓய்வூதியர்கள் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மண்டல தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் பவுல்ராஜ், இளங்கோவன், துணை செயலாளர் சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை மண்டல நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.