ஷார்ஜாவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சார்பில் இலவச பல் மருத்துவ முகாம்!
ஷார்ஜா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள மேனா வாட்டர் நிறுவனத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் டாக்டர் சிராஜுதீன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். இதில் 50 க்கும் மேற்பட்டோருக்கு பல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இலவச ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை மேனா வாட்டர் நிறுவனத்தின்
மனிதவளத்துறை அலுவலர் கட்டுமாவடி பைசல் ரஹ்மான் தலைமையிலான குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர். இலவச மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க துணைத் தலைவர் முதுவை ஹிதாயத், பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், துணை பொதுச் செயலாளர் தஞ்சை மன்னர் மன்னன் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டனர்.