அரிமளத்தை தனி தாலுகாவாக அறிவிக்க கோரி நடைபெற்ற கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தில் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவரும், அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளருமான பி.கே.வைரமுத்து கலந்து கொண்டார்

அரிமளத்தை தனி தாலுகாவாக அறிவிக்க கோரி நடைபெற்ற கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தில் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவரும், அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளருமான பி.கே.வைரமுத்து கலந்து கொண்டார்

Bismi

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் 32 பஞ்சாயத்துக்களை உள்ளடக்கிய ஒன்றியமாகும். அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரிமளத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கையை வைத்து வருகின்றனர். இதனிடையே கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு அரிமளம் தனி தாலுகாவாக அறிவிக்கப்படும் என வாக்குறுதி அளித்தது. இதனைத் தொடர்ந்து அரிமளம் தனி தாலுகாவாக அறிவிக்க தேவையான பணிகள் நடைபெற்றன. ஆனால் அப்பகுதி மக்கள் எதிர்பார்த்தது போல் இதுவரை அரிமளம் தனி தாலுகாவாக அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல்வேறு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், நீதிமன்றத்தை நாடியும் அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் நேற்று அரிமளத்தை தனித் தாலுகாவாக அறிவிக்க கோரி அரிமளம் எட்டாம் மண்டகப்படி அருகே கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் இருந்தனர். இதில் கலந்துகொண்ட முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பி.கே.வைரமுத்து உண்ணாவிரதம் இருந்த மக்களிடம் பேசினார். இதனைத் தொடர்ந்து வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைந்த உடன் உங்களின் கோரிக்கை நிறைவேற்றி தருவேன் என உறுதி அளித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்