தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய முன்னாள் தலைவர் பிகே.வைரமுத்து Ex.MLA திருமயம் தீ விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு நிதி உதவி வழங்கினார் 

- Advertisement -

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய முன்னாள் தலைவர் பிகே.வைரமுத்து Ex.MLA திருமயம் தீ விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு நிதி உதவி வழங்கினார்

திருமயம் சமத்துவபுரம் ஆர்ச் அருகில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த ருக்குமணி,ராஜாத்தி ஆகியோரை புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய முன்னாள் தலைவர் பிகே.வைரமுத்து Ex.MLA நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

- Advertisement -

தீ விபத்தில் எரிந்து சாம்பலான வீடுகளை பார்வையிட்டு நிதி உதவி வழங்கினார். பின்னர் திருமயம் தாசில்தாருடன் போனில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவிகளை காலம் தாழ்த்தாமல் வழங்க வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி முன்னாள் கவுன்சிலர் மணிகண்டன்,கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சிவகுமார், முத்துராமன் தலைமை ஆசிரியர் மாரிமுத்து, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் விக்னேஷ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்