கரூரில் உயிரிழந்த 41 நபர்களுக்கு   திருச்சியில் 16 வது நாள் துக்க அனுசரிப்பு நடைபெற்றது 

கரூரில் உயிரிழந்த 41 நபர்களுக்கு

திருச்சியில் 16 வது நாள் துக்க அனுசரிப்பு நடைபெற்றது

 

 

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தின் போது அந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.

Bismi

தமிழக மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும்

உலக நாடுகளில் இருந்தும் உயிரிழந்த நபர்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த நபர்களுக்கு 16 வது நாள் துக்க அனுசரிப்பாக மக்கள் நலனுக்கான மேடை என்ற அமைப்பு சார்பில் உயிரிழந்தவர்களின் புகைபடம் வைத்து அவர்களின் உருவ படத்தின் முன்பு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சாதி, மத, கட்சி வேறுபாடு இன்றி நூற்றுக்கணக்கான நபர்கள் ஒற்றுமையாக மெழுகுவர்த்தியை ஏற்றி, பூக்களை தூவி உயிரிழந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்