பொது மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் திருச்சியில் எஸ்.பி தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு!

0

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து நடத்திய கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி திருச்சி சமயபுரம் பகுதியில் இன்று நடைபெற்றது. ஊர்காவல் படையினரின் வாத்தியகுழு இசையுடன் நடைபெற்ற கொடி அணிவகுப்பை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

- Advertisement -

கொடி அணிவகுப்பானது சமயபுரம் ரெட்டியார் மகால் அருகே தொடங்கி சமயபுரம் மாரியம்மன் கோவில் வளைவு, சமயபுரம் கடைவீதி, நரசிம்ம மங்கலம் தெரு வழியாக சமயபுரம் காவல் நிலையம் முன்பு நிறைவடைந்தது.

இதில், திருச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், திருவெறும்பூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன், இலால்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மத்திய பாதுகாப்பு படையினர், திருச்சி மாவட்ட ஆயுதப்படையினர், திருச்சி மாவட்ட சட்டம் ஒழுங்கு பிரிவில் 8 காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் 60 பேர் என சுமார் 210 பேர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்