- Advertisement -

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!

- Advertisement -

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!

 

 

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் “பகுத்தறிவு பகலவன்” தந்தை பெரியாரின், 147-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்று (செப்டம்பர். 17) காலையில், ராதாபுரம் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அமைந்துள்ள, தந்தை பெரியாரின் மார்பளவு உருவச் சிலைக்கு, ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மி.ஜோசப் பெல்சி தலைமையில், மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் “சமூக நீதி நாள் உறுதிமொழி” ஏற்கப்பட்டது. தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கும், பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட, திமுக மாணவர் அணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, ராதாபுரம் மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் ஐ.ராமையா, திருநெல்வேலி மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் “சமூகை” முரளி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் செ.இசக்கி பாபு, துணை அமைப்பாளர்கள் சதீஷ், மகேஷ், ராதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் அரவிந்தன், விவசாய சங்கத் தலைவர் “பாப்பான்குளம்” ஐயப்பன், கிளை கழகச் செயலாளர்கள் காரியாகுளம் புல்லட் பெருமாள், பாவிரித்தோட்டம் செல்லையா, பாவேந்தர் பாரதிதாசன் நகர் கல்யாணசுந்தரம், நெடுவாளி கண்ணன், மகேந்திரபுரம் ஆறுமுகம், பசும்பொன்நகர் தங்கப்பன், உட்பட பலர் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.

Bismi

Vagai

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்