மணப்பாறையில் வனத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வடுகப்பட்டியில் மணப்பாறை வனசரகம் மற்றும் துவரங்குறிச்சி வனசரகம் சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மணப்பாறை வனச்சரக அலுவலா் மேரிலென்சி, துவரங்குறிச்சி வனச்சரக அலுவலா் தினேஷ்குமாா் மற்றும் மணப்பாறை சமூகக் காடுகள் வனச்சரக அலுவலா் தங்கராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் மணப்பாறை, துவரங்குறிச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு காட்டு விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும், குரங்குகள் மற்றும் காட்டெருமைகளால் ஏற்படும் விளைநில பாதிப்பை வனத்துறையினா் கவனத்தில் கொண்டு உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என வலியயுறுத்தினா். மேலும் காட்டெருமைகள் விளைநிலங்களுக்கு வருவதை தடுக்கும் வகையில் அகழி, வேலிகள் ஏற்படுத்தவும் கோரிக்கை வைத்தனா்.