ஜெய்லர் திரைப்படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் உடன் நடித்த ஆர்.விட்டல் காலமானார்.

0

ஜெய்லர் திரைப்படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் உடன் நடித்த
ஆர்.விட்டல் காலமானார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என 300-க்கும் மேற்பட்ட படங்களின் படத்தொகுப்பாளராக பணியாற்றிய பிரபல எடிட்டர் ஆர்.விட்டல் (வயது 91) அவர் இன்று (ஜூலை 26) காலமானார்.

நடிகர் ஜெய்சங்கர் நடித்த ‘முடிசூடா மன்னன்’, ‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’, ஏவிஎம் ராஜன் நடித்த ‘வீட்டுக்கு வந்த மருமகள்’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். தமிழ் திரையுலகில் ரஜினி, கமல் நடித்த ஏராளமான படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

- Advertisement -

‘ஆடு புலி ஆட்டம்’, ‘ஜப்பானில் கல்யாணராமன்’, ‘படிக்காதவன்’, ‘முரட்டுக்காளை’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘பாயும் புலி’, ‘விக்ரம்’, ‘ராஜா சின்ன ரோஜா’ உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு படத்தொகுப்பாளராக அவர் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான படத்தொகுப்பாளராக விட்டல் திகழ்ந்தார். SP.முத்துராமன் இயக்கத்தில் 71 படங்கள் எடிட்டராக பணியாற்றினார். சிவாஜி நடித்த 18 படங்களுக்கு எடிட்டராக பணியாற்றினார்.

இவரது மனைவி, மகன் ஏற்கெனவே இறந்து விட்டனர். இதனால் மகள் சுமதியின் பராமரிப்பில் இருந்து வந்த விட்டல், இன்று காலமானார். அவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்