தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தங்கள் குடும்பத்தினருடன் சீரடி பயணம்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தங்கள் குடும்பத்தினருடன் சீரடி பயணம்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தங்கள் குடும்பத்தினருடன், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடி பாபா ஆலயம் மட்டுமன்றி பல வரலாற்று சுற்றுலா தளங்களை கண்டு மகிழ்ந்தனர்
சுற்றுலா நிகழ்ச்சியில்
ஐயா எம்.டி.இராமலிங்கம், லட்சுமணன், கௌரி அசோகன்,
டாக்டர் சுப்பையா பாண்டியன்,
“எக்ரே” சண்முகம், டி.எஸ்.ஆர்.சுபாஷ், தோழர் இருதய ஞான ரமேஷ், திருமதி உஷா ஜனார்த்தனன், செல்வி பூஜா ஜனார்த்தனன், ஏர்டெல் பாலமுருகன் உட்பட 14 பேர்கள் கொண்ட குழு சுற்றுலா தளத்தினை கண்டு மகிழ்ந்தனர்.
சுற்றுலா குறித்து டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் அவர்கள் கூறுகையில்
பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகள் இருந்த நிலையில் ஜூலை 3 ஆம் தேதி பணம் அச்சடிக்கும் இடமான நாசிக் நகரம் சென்றதும், அங்கு பிரபலமாக விளங்கும் கருப்பு ராமர் கோவில், லட்சுமணன் சூர்ப்பனகையின் நாக்கை அறுத்த இடம், ஹனுமான் கோவில், மற்றும் திரிவேணி சங்கமம் ( அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் எனுமிடத்தில் கங்கை, யமுனை ஆறுகளுடன் கட்புலனாகாத சரசுவதி ஆறும் வந்து கலப்பதாக நம்பப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இடத்தில் கும்பமேளா நிகழ்த்தப்படுகிறது ) மற்றும் மிகவும் பழமையான திரும்பகேசகர் எனும் சிவன் கோவில் ஆகியன ஒரு பகுதியாக கண்டு வியந்தோம்
அடுத்த கட்டமாக, பார்த்து வியந்த இடம்,
பீபி கா மக்பாரா அதாவது மினி தாஜ்மஹால் என்று அழைக்கப்படும் வரலாற்று புகழ்பெற்ற இடம் இது !
முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் மனைவியான தில்ரஸ் பானு பேகத்தின் நினைவாக, அவரது மகன் முகமது ஆசம் ஷாவால் மகாராட்டிர மாநிலம், அவுரங்காபாத் நகரத்தில் கிபி 1651 – 1661களில், ரூபாய் 16,68,203 பொருட் செலவில் ( அன்றைய கால மதிப்பு ) எழுப்பட்ட நினைவிடக் கட்டிடம் ஆகும்.
அதற்கு முன்னதாக,ஜூலை 4 ஆம் தேதி காலை, முதலில் சென்ற இடம், “சனி சிங்கனாப்பூர்” என்ற சனி பகவான் ஆலயம் அது !
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், அகமதுநகர் மாவட்டத்தில், நய்வாசா வட்டத்தில் அமைந்துள்ள சிறு நகரம்.
சனி சிங்கனாப்பூரின் சிறப்பு, அங்குள்ள எந்த வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களின் கட்டிடங்களுக்கும் கதவுகள் இல்லை. ஆனால் நிலைக்கதவுகள் மட்டும் உண்டு.
அடுத்ததாக கண்டு வியந்த இடம் ” எல்லோரா சிற்ப நகரம் ”
எல்லோரா, மகாராஷ்டிராவில் உள்ள ஒரு தொல்லியற் களமாகும்.
இது சம்பாஜி நகரிலிருந்து வடமேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
ராஷ்டிரகூட மரபினரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த இக்களம் புகழ் பெற்ற குடைவரைகளைக் கொண்டு விளங்குகிறது.
எல்லோரா ஒரு உலக பாரம்பரியக் களம் ஆகும்.
அன்று இரவு கிருஷ்ணேஷ்வர் ஜோதிரலிங்க ஆலயம் வந்து சேர்ந்தோம் !
இது ஒரு பாரம்பரிய மிக்க சிவன் கோவிலாகும் !
கேரள மாநிலம் குருவாயூர் போல பல பழங்கால சம்பிரதாயங்கள் கொண்ட இடமாக விளங்கினாலும், பக்தர்கள் தானாகவே பூஜைகள் செய்து கொள்ளலாம் !
கடைசி நாளான ஜூலை 7 ஆம் தேதி, விஷ்னு அவதாரம் கொண்ட ஐந்து முக விநாயகர், பாபா வாழ்ந்த பழைய சீரடி கிராமம், உட்பட, பல ஆன்மீக இடங்கள் மட்டுமன்றி பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும் ஒரே குடும்பமாக ஒன்று கூடி சென்று வந்த நிகழ்வு காணக்கிடைக்காத ஒன்றாகும் !
கலந்து கொண்டு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி ! தெரிவித்தார்.
Comments are closed.