ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா!
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து தரப்பினரும் தயாராகி வருகின்றனர். தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டை உலகுக்கு உணர்த்தும் வகையில், தைத்திங்கள் முதல்நாள் தமிழர்திருநாள் என ஆண்டுதோறும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இந்த பொங்கல் விழாவில் கல்லுரி மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து ஆர்வமுடன் பங்கேற்று பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடினர்.
ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஸ்ரீ வெங்கடேஷ் பொங்கல் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார். மேலும் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழாவில் ஆட்டம், பாட்டம், தனித்திறமை, ரங்கோலி கோலப்போட்டி மற்றும் பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் பானை உடைத்தல் போட்டியில் பங்குபெற்ற மாணவ மாணவிகள் கண்களைக் கட்டிகொண்டு மேலே கட்டப்பட்டுள்ள பானையை உடைக்க நடந்து சென்று சுற்றி திரிந்து பானையை உடைக்க முயன்ற காட்சி பெரும் நகைச்சுவை அலையை ஏற்படுத்தியது. இறுதியாக பேராசிரியர் ரமேஷ் பானையை உடைத்து வெற்றி பெற்றார்.
Comments are closed.