மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்! நெல்லை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் பங்கேற்பு!
மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்! நெல்லை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் பங்கேற்பு!

மின்வாரியம் சார்பாக, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற, மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!


நெல்லை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி பங்கேற்பு!
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பாக, திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட, வள்ளியூர் மின் கோட்டத்தின் “மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள்” கூட்டம், செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று [ஆகஸ்ட்5] காலையில், நடைபெற்றது. கூட்டத்தில், திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி பங்கேற்று, மின் பயனீட்டாளர்களிடம் இருந்து, நேரடியாக மனுக்களை பெற்றார். பயனீட்டாளர்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக்கொண்ட மேற்பார்வை பொறியாளர், “மின் வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு, நடவடிக்கை எடுக்க, வள்ளியூர் மின் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு மற்றும் ஏனைய அலுவலர்களுக்கு, உத்தரவிட்டார். நிகழ்ச்சியில், வள்ளியூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் முடிந்தவுடன், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் பேசிய மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி, “முதலமைச்சரின் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட பயனீட்டாளர்களின் மனுக்கள் மீது, உரிய ஆய்வு மேற்கொண்டு, மின்வாரிய விதிகளுக்கு உட்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளவும், அனைத்து மின் இணைப்புகளையும், தொடர்ச்சியாக ஆய்வு செய்து, மின்வாரிய விதிமுறைகளுக்கு முரணாக உள்ள, மின் இணைப்புகளை முறைப்படுத்தவும், விவசாய நிலங்களில் மின் வேலி அமைக்கப்பட்டு இருந்தால், உடனடியாக அவற்றில் மின் துண்டிப்பு செய்து, காவல்துறை உதவியுடன், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், வள்ளியூர் கோட்டத்தில் நடைபெற்று வரும், மின்வாரிய வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்கவும், பொது பயனீட்டாளர்களிடையே மின் சிக்கனம், மின் பாதுகாப்பு போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உத்தரவிட்டார். “மின்சாரம் சம்பந்தமாக, ஏதேனும் உதவி தேவைப்பட்டால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயலி மூலமாகவும், ( TNPDCL OFFICIAL APP ) தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சமூக வலைத்தளங்கள் மற்றும் மின் தடை நீக்கும் மைய தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034 ஆகியவற்றின் மூலமும், மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 மூலமும், தொடர்பு கொண்டு அனைத்து தேவைகளையும், பூர்த்தி செய்து கொள்ளலாம்!”என்றும், தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்





Comments are closed.