வலசு பாளையத்தில் கிடப்பில் கிடக்கும் தரை நிலைத் தொட்டி பயன்பாட்டிற்கு வந்தால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும் – சமூக ஆர்வலர்கள்
வலசு பாளையத்தில் கிடப்பில் கிடக்கும் தரை நிலைத் தொட்டி பயன்பாட்டிற்கு வந்தால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும் – சமூக ஆர்வலர்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கணபதிபாளையம் கிராமத்துக்கு உட்பட்ட வலசு பாளையம் பகுதியில் குடிநீர் தேவைகளுக்காக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் தரை நிலைத் தொட்டி ஒன்று கட்டப்பட்டு கடந்த நான்கு வருடங்களுக்கு முன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கட்டப்பட்டு இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது, இதனை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பட்சத்தில் இந்த பகுதியில் உள்ள வீடுகளின் குடிநீர் பிரச்சனையை முழுமையாக தீர்க்க முடியும், அப்படி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பொதுமக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்பதை இதன் மூலம் ஊராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Comments are closed.