சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களின் தேவை என்ன என்பதை கேட்பதற்காக “வளர்ச்சி அடைந்த பாரதம் மோடியின் உத்தரவாதம்” எனும் தலைப்பில் தேர்தல் அறிக்கை பெட்டி என்ற புதுமையான திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருந்தது. அதன்படி திருச்சி மகாலட்சுமி நகர் பகுதியில் பாஜக தேர்தல் அறிக்கை பெட்டி வைக்கும் நிகழ்ச்சியை தேசிய செயற்குழு உறுப்பினரும், திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நேற்று தொடங்கி வைத்தார். இதில் வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் லட்சியத்தை அடைவதற்கு உண்டான ஆலோசனைகளை, அப்பகுதி பொது மக்கள் கடிதமாக எழுதி வழங்கினர். இந்நிகழ்வில் பாஜக திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.