குடித்த பாட்டிலை கீழே போட வேண்டாம்..!! டாஸ்மாக்கே திரும்ப பெறும்..!! அரசு புது திட்டம்..!!
காலி மது பாட்டில்களை டாஸ்மாக்கே திரும்ப பெறும் திட்டத்தை டிசம்பர் இறுதிக்குள் செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. முதல்கட்டமாக, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, விற்பனை செய்யும்போது, பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வைத்து விற்பனை செய்யவும், காலி பாட்டிலை திரும்பப் பெற்றதும், அந்த 10 ரூபாயை வாடிக்கையாளரிடம் மீண்டும் கொடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.