தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சி வரகனேரியில் மாவட்டத் தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் அப்துல் ரஹீம், சையத் முகமது, புரோஸ்கான், மாவட்ட நிர்வாகி ஜாகிர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,…
இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா அதிபர் ட்ரம்பின் தீவிர முயற்சியின் காரணமாக இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. போரினால் அப்பாவி மக்கள் இரண்டு நாடுகளிலும் பலியாவார்கள். அந்த நிகழ்வு நடைபெற கூடாது என்பது
உலக மக்கள் விரும்பக்கூடிய ஒன்றாக உள்ளது. இந்திய அரசாங்கம் பஹல்காமில் நடைபெற்ற அந்த துப்பாக்கிச் சூட்டை
நடத்தியவர்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என்பதுதான் இந்திய மக்களின் எதிர்பார்ப்பு. தீவிரவாத இடங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கு இந்திய ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தி உள்ளது.
அதே நேரத்தில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நாட்டின் பாதுகாப்பிற்காக பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது.
நாட்டின் பிரதமர் இந்தியா பாதுகாப்பாக உள்ளது என கருத்து கூறி வருகிறார். டெல்லி உறுதியாக இருந்தால் நாட்டின் எல்லை பகுதி பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகும் இன்று பஹல்காமில் துப்பாக்கிச் சூட்டில் 26 அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளது. இந்த படுகொலையை செய்தவர்கள் பாதுகாப்பாக எல்லையை கடந்து, எப்படி வேறு நாட்டிற்குச் சென்றார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. இது பாதுகாப்பில் இந்திய அரசு எவ்வளவு பலவீனம் அடைந்துள்ளது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. இதே போல் ஏற்கனவே நடைபெற்ற புல்வாமா தாக்குதலிலும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதுவும் பாதுகாப்பு பலவீனமாக பார்க்கப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டால் காஷ்மீர் பாதுகாப்பாக இருக்கும், நாட்டின் பாதுகாப்பு உரிமைகளை நாங்கள் எடுத்து இருக்கிறோம். ஒட்டுமொத்த மக்களுக்கும் நாங்கள் பாதுகாப்பு வழங்குவோம் என்று சொன்ன மோடி இன்றைக்கு பாதுகாப்பு துறையில் பலவீனமடைந்துள்ளார் என்பதை இந்த துப்பாக்கிச் சூடு காட்டுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் வீழ்த்தப்பட்டு உள்ளனரா என்பது தான் நிதர்சனமான உண்மை.
அதற்கு ஆதரவு தந்ததாக பாகிஸ்தானையும், தீவிரவாத குழுக்களையும் இந்திய அரசாங்கம் ராணுவத்தைக் கொண்டு தாக்கியிருக்கிறது இதை வரவேற்கிறோம். ஆனால், அது குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டிய அவசியம் பிரதமருக்கும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கும் உள்ளது என்பதை நம் கவனத்தில் கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் பாதுகாப்பை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தியா பாகிஸ்தான் போர் வந்த பிறகு, நாட்டில் பரபரப்பாக பேசி வந்த
வக்பு வாரிய திருத்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தில் இன்றைக்கு விசாரணைக்கு இருக்கிறது.
நீதியின் மீது ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் மட்டுமல்ல
நடுநிலையான ஹிந்து மத சகோதரர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர். நிச்சயம் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
வக்பு சொத்துக்களை குறித்து பொது மக்களிடம் பிரச்சாரத்துக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் எங்கள் சொத்து, எங்கள் வக்பு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் வக்பு சொத்து தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். தீர்ப்பு எதிராக வந்தது என்று சொன்னால் தமிழகமே
ஸ்தம்பிக்கக்கூடிய மிகப்பெரிய போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் கையில் எடுப்போம்.
தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலின் போது இஸ்லாமியருக்கான ஒதுக்கீடு 3.5% இருந்து உயர்த்தி தருவதாக தெரிவித்தார். ஆனால் இதுவரை இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடை உயர்த்தி வழங்கவில்லை.
அதிமுக, பிஜேபியுடன் சென்றுவிட்டது, என்பதால் இஸ்லாமியர்கள் திமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள் என ஒரு எண்ணத்தில் இந்த இட ஒதுக்கீடை வழங்காமல் இருந்தார், என்று சொன்னால் வருகிற தேர்தலில் இஸ்லாமியர்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள். அதற்கு மாற்று ஏற்பாடு செய்வார்கள் என்பதை தமிழக முதல்வர் கவனத்திற்கு நாங்கள் கொண்டு வருகின்றோம்.
இட ஒதுக்கீட்டை உடனடியாக உயர்த்தி வழங்குவார்கள் என்று சொன்னால் அதற்கு நன்றி கடன் பட்டவர்களாக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் திமுகவை மீண்டும் ஆட்சியில் அமத்துவார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். சிறுபான்மையினர் எவ்வளவு நன்மை அடைந்துள்ளனர், என்பதை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.இட ஒதுக்கீட்டை 7சதவீதம் ஒதுக்கி தரவேண்டும் என்பது எங்களது கோரிக்கை. முதல்வர் முதல் கட்டமாக எங்களுக்கு 5%சதவீதமாக உயர்த்தி தரவேண்டும்.
கண்டிப்பாக நாங்கள் அதிமுகவை ஆதரிக்க மாட்டோம் அவர்கள் பிஜேபியுடன் உள்ளனர். அதற்கு மாற்றாக இருக்கக்கூடிய கட்சிகள் உள்ளனர். உதாரணத்திற்கு விஜய், நாம் தமிழர் இயக்கம் உள்ளது. இந்த இரண்டு இயக்கங்களும் இல்லாத கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார்.
Comments are closed.