- Advertisement -

மண்ணச்சநல்லூர், புலிவலத்தில் திமுக வேட்பாளர் கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பு – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

- Advertisement -

மண்ணச்சநல்லூர், புலிவலத்தில் திமுக வேட்பாளர் கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பு – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

​மண்ணச்சநல்லூர்

 

Vagai

​2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புலிவலம் ஊராட்சியில், திமுக வேட்பாளர் கதிரவன் அவர்கள் ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு ஆதரவு திரட்டி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வருகை தந்த வேட்பாளர் கதிரவனுக்கு, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

Bismi

​வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர், பொதுமக்களிடம் கைகொடுத்து வாழ்த்துப் பெற்றார். முதியவர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

 

​இந்த பிரச்சாரத்தின் போது மண்ணச்சநல்லூர் ஒன்றிய கழகச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

 

​திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் திரளாகப் பங்கேற்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

 

​பிரச்சாரத்தில் புலிவலம் ஊராட்சி மக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர், திமுக அரசின் சாதனைகளை விளக்கி கூறி, தொகுதி வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவதாக உறுதி அளித்தார்.

 

​#Mannachanallur #Election2026 #DMK #Udayasuryan #Kathiravan #Pulivalam #TNElection #DMKVetri #மண்ணச்சநல்லூர் #புலிவலம் #உதயசூரியன் #திமுக

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்