மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மக்களுக்கான ரேஷன் பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் எனவும், காவிரி நீரை திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி மாவட்ட தேமுதிக சார்பில் மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் இராகவ் பிரகாஷ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.