சேலம் மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.
பன்முகக் கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பு, திருச்சி மாவட்டத்தில் தலைமை இடமாக கொண்டு இயல், இசை, நாடகம் துறைகளை சேர்ந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இயங்கி வருகிறது,
தீபாவளி பண்டிகை முன்னிட்டு இயல் இசை நாடக கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் ஒருங்கிணைப்பாளர் பகுருதீன் அலி அகமது அவர்களின் ஒருங்கிணைப்பில், நிறுவனர் & தலைவர் வேல்முருகன் தலைமையில், பொதுச் செயலாளர் பழனி முருகன், பொருளாளர் பாலமுருகன், துணை ஒருங்கிணைப்பாளர் சுபேர்தீன் முன்னிலையில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய பிரேமா அவர்களின் வழிகாட்டுதலின்படி, சேலம் மாவட்ட தலைவர் பிரவீன் குமார், துணைத் தலைவர் கோகுல், மகளிர் அணி தலைவி ஜானகி, மகளிர் அணி துணை தலைவி கலைவாணி, மற்றும் மகளிர் அணி செயலாளர் மகாலட்சுமி ஆகியோர் இணைந்து சேலம் மாவட்டத்தில் உள்ள பன்முக கலைஞர் களுக்கு தீபாவளி பரிசு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர் மேலும் இந்நிகழ்ச்சியில் ரேணுகா, நளினி, கீதா, அருள், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.