- Advertisement -

திருச்சியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் – எம்.பி. திருநாவுக்கரசர் பங்கேற்பு!

0

- Advertisement -

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் ஒவ்வொரு திட்டத்தின் கீழ் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, எவ்வளவு மக்கள் பயன்பெற்றுள்ளனர். திட்டத்திற்கான இலக்கீடு எவ்வளவு, அதில் தற்போது வரை இலக்கீடு எவ்வளவு எய்தப்பட்டுள்ளது என்பது குறித்து குழுத் தலைவர் திருநாவுக்கரசர் ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள் அவர்களது பகுதியில் உள்ள தேவைகள் குறித்து கண்காணிப்புக் குழு தலைவரிடம் தெரிவித்தனர். மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், திட்டப்பணிகளை தரமாகவும், விரைந்து செயல்படுத்தியும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

Bismi

இதனைத் தொடர்ந்து சாலை பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற தொகுதிக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மகளிர் திட்ட அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் இராஜேந்திரன், மாநகர காவல் துணை ஆணையர் அன்பு, உதவி ஆணையர் போக்குவரத்துக் காவல் (மாநகரம்) ஜோசப் நிக்சன், உள்ளிட்ட காவல் துறை அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், அரசுத்துறை உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்