பெண் குழந்தைகளுக்கு சிறுதானிய சிற்றுண்டி பெட்டகம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
பெண் குழந்தைகளுக்கு சிறுதானிய சிற்றுண்டி பெட்டகம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

பெண் குழந்தைகள் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்னும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பல்வேறு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (26.02.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண் குழந்தைகள் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்னும் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பாக 20 பெண் குழந்தைகளுக்கு சிறுதானிய சிற்றுண்டி பெட்டகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று வழங்கினார்.

