துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி வாயில் முன்பு கருப்புஅட்டை அணிந்து வாயிற் முழக்கப் போராட்டம்
துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி வாயில் முன்பு கருப்புஅட்டை அணிந்து வாயிற் முழக்கப் போராட்டம்
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் இயங்கும் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து கல்லூரி வாயில் முன் கண்டனம் பழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் முனைவர் பி. டேவிட் லிவிங்ஸ்டன்தலைமை வைத்தார்.
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக தலைவர் செல்வராணி செயலாளராமன் பொருளாளர் அன்பழகன் துணைத் தலைவர் அறிவழகன் இணை செயலாளர் ஜெயந்திமாலா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இந்த வாயிற்முழுக்க போராட்டத்தில்
பேராசிரியர் பணி மேம்பாடு, விரைந்து வழங்கப்பட வேண்டும்.
புத்தொளி, புத்தாக்க பயிற்சி நிபந்தனைக்கான கால அவகாசத்தை டிசம்பர் 2023 வரை நீடித்து ஆணை உடன் வழங்கப்பட வேண்டும்.
அரசு மாற்றுப்பணியின் அடிப்படையில் பணியாற்றும் கல்லூரிகளில் அண்ணாமலை பல்கலைக் கழக மிகை ஆசிரியர்களை அரசு கல்லூரிகளில் பணி நிரந்தரம் செய்யக் கூடாது.
முனைவர் பட்டம் பெறாத ஆசிரியர்களுக்கு தமிழக அரசாணை எண் 5 ன் படி, இணைப்பேராசிரியர் பணி மேம்பாடு வழங்க வேண்டும்.
சி.பி.எஸ். திட்டத்தில் சேர்க்கப்பட்டு, பணி நீடிப்பில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 20 சதவீதம் ஊதிய குறைப்பினை உடன் நிறுத்த வேண்டும்.
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். கல்லூரிக்கல்வி இயக்குனராக பணியில் மூத்த அரசு கல்லூரி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.
நான் முதல்வன் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைந்து சிறப்பாக நடைபெற சங்க நிர்வாகிகளிடம் ஆலோசனை பெற வேண்டும். கல்லூரி ஆசிரியர்கள், முதல்வர்கள் நியமனங்களை விரைவு படுத்த வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த வாயில் முழக்க போராட்டம் நடைபெற்றது.
இதில் கிளை கழக பொறுப்பாளர்களும், 80 க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது என்றும் இது முதல் கட்டம் தற்போது நடைபெற்றதாகவும் . இரண்டாவது கட்டம் வரும் 20ம் தேதி திருச்சி மண்டல கல்லூரி கல்வி இயக்குனரகம் மூன்றாவது கட்டம் மாநில தலைநகரான சென்னையில்உள்ள கல்லூரி கல்வி இயக்குனரகம் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவித்தனர்.
Comments are closed.