சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் “காணொளி” காட்சி வாயிலாக, அடிக்கல் நாட்டிய “துணை முதலமைச்சர்” – திருநெல்வேலி

சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் “காணொளி” காட்சி வாயிலாக, அடிக்கல் நாட்டிய “துணை முதலமைச்சர்” – திருநெல்வேலி

 

 

 

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியம், “விஜயாபதி” கிராமத்தில்,14 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ள, சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் ஆகியவற்றிற்கு, “காணொளி” காட்சி வாயிலாக, அடிக்கல் நாட்டிய “துணை முதலமைச்சர்” உதயநிதி ஸ்டாலின்!

 

 

Bismi

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, கடலோரக் கிராமங்களில் வாழும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரிடம் உள்ள, விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை மேம்படுத்திடும் வகையில், 14 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட உள்ள, சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி மையம் ஆகியவற்றிற்கு, “தமிழக துணை முதலமைச்சர்” உதயநிதி ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே, காணொளி காட்சி வாயிலாக, இன்று ( அக்டோபர்.16) காலையில், அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை, துவக்கி வைத்தார். அதே நேரத்தில், நெல்லை ராதாபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார்,மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் ஊர்மக்கள் ஆகியோருக்கு, “இனிப்புகள்” வழங்கப்பட்டன. “தமிழ்நாடு முதலமைச்சர்” மு.க. ஸ்டாலின், 2022-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி, பாளையங் கோட்டையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய போது, “திருநெல்வேலி மாவட்டத்தில், கடற்கரையோரப் பகுதிகளில், இளைஞர்கள் அதிக எண்ணிக்கையிலும், மிகுந்த ஆர்வத்துடனும் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்பதால், அவர்களை ஊக்குவித்து, தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில், அவர்களை பங்கேற்கச் செய்யும் வகையில், ராதாபுரம் ஒன்றியம் “விஜயாபதி” கிராமத்தில், சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி மையம் ஆகியன, அமைக்கப்படும்!”- என்று, அறிவித்தார். அதன் ஒரு பகுதியாகத்தான், 14 கோடியே, 77லட்சம் ரூபாய் மதிப்பில், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், “விஜயாபதி” கிராமத்தில், விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி மையம் ஆகியவை அமைப்பதற்காக, இன்று (அக்டோபர்.16) அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டிடப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன. மேலும், சர்வதேச தரத்துடன், பல்வேறு விளையாட்டுகளை விளையாடும் வகையில், தடகளம், இறகு பந்து உள் விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம்,கையுந்து பந்து, கால்பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டு களுக்கான வெளிப்புற மைதானங்கள், உள் விளையாட்டு அரங்கம், பார்வையாளர்கள் அமரும் வகையிலான இருக்கை வசதிகள், குளியல் அறைகள், உடை மாற்றும் அறைகள்,பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் ஆகிய வசதிகளுடன், விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது! என்பது, குறிப்பிடத்தக்கதாகும். ராதாபுரத்தில்,இன்று (அக்டோபர்.16) நடைபெறற நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷண சக்கரவர்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜான்சி ரூபா, ராதாபுரம் ஊராட் மன்றத்தலைவி பொன் மீனாட்சி அரவிந்த், கூடங்குளம் ஊராட்சி மன்றத்தலைவி வின்சி மணியரசு, சிதம்பராபுரம் ஊராட்சி மன்றத்தலைவி பேபி முருகன், திமுக நிர்வாகிகள் மி. ஜோசப் பெல்சி, எரிக் ஜூடு, அலெக்ஸ் அப்பாவு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் உட்பட பலரும், கலந்து கொண்டனர்.

 

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்