- Advertisement -

திருச்சி மாநகராட்சியை கண்டித்து மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!

- Advertisement -

திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளைக் கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களை செயல்படுத்தாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் திமுக அரசைக் கண்டித்தும், பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், உயர்த்தப்பட்டுள்ள பல்வேறு வரிகளை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தியும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை வகித்து பேசினார். கழக அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல் முன்னிலை வகித்து பேசினார்.

Vagai
Bismi

சிறப்பு அழைப்பாளராக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் மோகன் பங்கேற்று திருச்சி மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கண்டன உரையாற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்கள் அரவிந்தன், ஜோதி வாணன், மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், ஜெ.பேரவை என்ஜினியர் கார்த்திகேயன் மற்றும் பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ்.பூபதி, சுரேஷ் குப்தா, வெல்லமண்டி சண்முகம், ஏர்போர்ட் விஜி, ரோஜர், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி, புத்தூர் ராஜேந்திரன், கலைவாணன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்