கோரிக்கைகளை வலியுறுத்தி நவ.12 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் – சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு!
தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். நடைபெற்ற பணிகள் குறித்து பொதுச் செயலாளர் இராமமூர்த்தி விளக்கி பேசினார். மேலும் பல்வேறு பொருள்கள் குறித்து அனைத்து மாவட்டங்கள் சார்பில் மாநில நிர்வாகிகள் உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் சத்துணவு அங்கன்வாடி ஓய்ஊதியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், உடனடியாக ஓய்வூதியம் உயர்த்த வேண்டும் மற்றும் அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், குடும்ப நல நிதி உள்ளிட்டவைகளை வழங்கக்கோரி வரும் நவம்பர் 12 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், டிசம்பர் 10 ஆம் தேதி சென்னையில் மாநில அளவிலான தர்ணா போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பொருளாளர் ராமநாதன், மாநில செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மாநில செயலாளர்கள், மாநில துணை தலைவர்கள் உள்பட மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.