- Advertisement -

ஶ்ரீரங்கம் முனீஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்து வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர் தாமோதரன்!

0

- Advertisement -

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரச்சாரம் வரும் 17 ஆம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் பத்மஶ்ரீ தாமோதரன் பொது மக்களை சந்தித்து கேஸ் ஸ்டவ் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

Vagai

Bismi

அந்த வகையில் இன்று திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். ஶ்ரீரங்கம் முனீஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்து பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர் தாமோதரன் மாம்பழச்சாலை, சேஷபுரம், கணபதி நகர், பெரியார் நகர், தேவி திரையரங்கம், திருவானைக்காவல், கொண்டையம்பேட்டை, ஶ்ரீரங்கம், செட்டி தோப்பு, மேலூர் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். அப்போது மக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

பிரச்சாரத்தின் போது வேட்பாளர் தாமோதரன் பேசுகையில்….

நான் வெற்றி பெற்றால் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் எளிதில் கிடைக்க வழிவகை செய்வேன். புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் மல்லிகை பூ, கோழி கொண்டை, கிரேந்தி உள்பட ஏராளமான மலர் சாகுபடி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்களுக்கு இந்த பகுதியில் மல்லிகை பூ சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நான் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானால் நிச்சயம் இந்த பகுதியில் மல்லிகை பூ சென்ட் தொழிற்சாலை அமைத்து தருவேன். மேலும் மலர்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைக்கும் வகையில் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவேன். கேஸ் ஸ்டவ் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்