சாலஞ்சர் டென்னிஸ்யில் தக்சினேஸ்வர் வெற்றி !

சாலஞ்சர் டென்னிஸ்யில் தக்சினேஸ்வர் வெற்றி !

Bismi

சாலஞ்சர் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் தக்சினேஸ்வர் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் பெங்களூருவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ‘வைல்டு கார்டு’ வீரர், இந்தியாவின் தக்சினேஸ்வர் 25, குரோஷியாவின் அஜ்டுகோவிச்சை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய தக்சினேஸ்வர், அடுத்த செட்டையும் 6-4 என வசப்படுத்தினார். முடிவில் தக்சினேஸ்வர் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் கரண் சிங், 2-6, 4-6 என குரோஷியாவின் கோஜோவிடம் வீழ்ந்தார். ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சாகேத் மைனேனி, கல்யாண்புர் ஜோடி 7-6, 4-6, 13-11 என இந்தியாவின் சுமித் நாகல், தென் ஆப்ரிக்காவின் லியாடு ஜோடியை வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்