திருச்சி அருகே கால்வாயில் முதலை நடமாட்டம் – முதலையைப் பிடித்த வனத்துறையினர்.

திருச்சி அருகே கால்வாயில் முதலை நடமாட்டம் – முதலையைப் பிடித்த வனத்துறையினர்.

 

 

Bismi

திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் திருச்சி பகுதியில் உள்ள நீர்நிலையில் முதலை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பகுதியில் எஸ்.புதுக்கோட்டை அருகில் விவசாய நிலத்திற்கு வரும் சிறிய வாய்க்கால் வழியாக முதலை நடமாட்டம் கண்டறியப்பட்டு உடனடியாக வனத்துறைக்கு காவல்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் பொது மக்களும் தெரிவிக்கப்படுத்தியதால் உடனடியாக வனத்துறை உதவியுடன் முதலையை உயிருடன் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றனர். ஆகையால் நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களில் பயணிக்கும் போது அனைவரும் பார்த்து செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்