காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு, ராகுல் காந்தி பேச வேண்டிய நேரத்தில் பேசுவார், காங்கிரஸ் யாருக்கும் அஞ்சி,பயப்படுகின்ற கட்சி அல்ல – கே எஸ் அழகிரி திருச்சியில் பேட்டி.
காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு, ராகுல் காந்தி பேச வேண்டிய நேரத்தில் பேசுவார், காங்கிரஸ் யாருக்கும் அஞ்சி,பயப்படுகின்ற கட்சி அல்ல – கே எஸ் அழகிரி திருச்சியில் பேட்டி.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறையின் சார்பில் 4-வது மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மொராய் சிட்டி பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே எஸ் அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே எஸ் அழகிரி கூறும் போது..,
தமிழகத்தில் இருக்கும் பிரச்சனைகளை நுணுக்கமாக ஆராய்வதற்கு இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது பல்வேறு பிரச்சனைகளை ஆராய்ந்த பின்னர் மத்திய மாநில அரசுகளுக்கு அறிக்கையாக கொடுக்கப்படும்.
மதம் ஜாதி மொழி என்பது நமது அடையாளம் அதனால் பிரச்சனைகளை உருவாக்குவது என்பது தவறான ஒன்று.
மகாத்மா காந்தி ஐரோப்பிய நாட்டு பத்திரிக்கையாளர்களிடம் நான் வணங்கும் ராமபிரான் இதை அனுமதிக்க மாட்டார் என கூறியிருந்தார்.
பாஜக ஆர்எஸ்எஸ் இந்து கடவுள்களை காப்பாற்றுவது போல பேசி கலவரத்தை உருவாக்குகிறார்கள்.
தமிழகத்தில் முருகன் பெயரை சொல்லி கலவரம் செய்ய பார்க்கிறார்கள் முருகன் ஆர்எஸ்எஸ் பாஜக கிடையாது.
பாகிஸ்தானில் ராணுவத்தை தாண்டி யாரும் ஆட்சி செய்வது கிடையாது அங்கு வரும் பிரதமர்கள் இதுவரை முழுமையாக ஆட்சி செய்தது கிடையாது. அங்கு மதத்தை வைத்து ஆட்சி செய்ய பார்க்கிறார்கள். அதேபோல இங்கு, இந்து பாகிஸ்தான் போல ஆக்க நினைக்கிறார்கள்.
திமுக காங்கிரஸ் கொள்கை சார்ந்த கூட்டணியை அதிமுக சிதைக்க பார்க்கிறது.
திருச்சி சிவா காமராஜர் குறித்து பேசியது என்பதற்கு குறித்த கேள்விக்கு..,
அவர் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது இது குறித்து சமூகமான விளக்கத்தை தமிழக முதல்வர் கொடுத்து இருக்கிறார் சிவா முக்கியம் கிடையாது முதல்வர் இதற்கான விளக்கத்தை தெளிவுபடுத்தி இருக்கிறார்.
*காமராஜர் குறித்த திருச்சி சினிமா பேச்சுக்கு ராகுல் காந்தி எந்தவித எதிர்ப்பும் கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு..,*
காங்கிரஸ் எப்போதும் அஞ்சுகிற,பயப்படுகிற இயக்கம் கிடையாது. ராகுல் காந்தி எங்கு பேச வேண்டுமோ அங்கு தேவைப்பட்டால் பேசுவார்.
தமிழகத்தில் சிறுமி கடத்தி வன்கொடுமை செய்யப்பட்டது என்பது குறித்த கேள்விக்கு..,
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது ராம ராஜ்ஜியத்திலே தவறு நடந்திருக்கிறது.
அப்படி இருக்கும் போது ஒரு சில தவறுகள் நடக்கத்தான் செய்யும். அவ்வப்போது வழக்கு பதிவு செய்து நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை மாநில தலைவர் மாணிக்கவாசகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.