திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் – இந்தியா கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் நடத்வது என தீர்மானம்!
மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று இரவு நடைபெற்றது. மாவட்ட தலைவர் பைஸ் அகமது தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, மாவட்ட பொருளாளர் ஹுமாயூன் கபீர், தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர், தலைமை பிரதிநிதி வழ நூர்தீன், IPP மாநில துணை செயலாளர் முகமது ரபீக், IT Wing மாநில துணை செயலாளர் நஜீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இக்கூட்டத்தில் 01.04.2024 அன்று மமக பொதுசெயலாளர் ப.அப்துல் சமது MLA தலைமையில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர், மமக துணை பொது செயலாளர் தாம்பரம் யாக்கூப், அமைப்பு செயலாளர் புதுமடம் ஹலீம், மாண்புமிகு மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், தமுமுக மமக மாவட்ட, துணை, அணி நிர்வாகிகள், இந்தியா கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள், தொழிலதிபர்கள், சமூக நல ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் வகையில் திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் “மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி” 28 வது வார்டு தென்னூர் பகுதியில் நடத்துவது என்றும், விரைவில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மமக சார்பில் இந்தியா கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்து மாபெரும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர்கள் அசாருதீன், இம்ரான் உள்ளிட்ட மாவட்ட துணை மற்றும் அணிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.