தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுத் தலைவருமான ஓ.பன்னீர் செல்வம், திருச்சியில் நடைபெற்ற பெரும்பிடு முத்தரையா் சதய விழாவில் கலந்து கொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்….
அமராவதி என்பது காவிரியின் துணை நதியாகும். மேலும், அமராவதி அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீரும் காவிரியில்தான் கலக்கிறது. எனவே, அதுவும் காவிரி நடுவா் மன்றத் தீா்ப்புக்கு உபட்டதுதான். எனவே, காவிரிக்கு வரும் தண்ணீரை யாா் தடுத்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.மேகதாட்டு பகுதியில் கா்நாடகம் அணை கட்டுவதாக இருந்தாலும், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளம் அணை கட்டுவதாக இருந்தாலும் அது சட்டவிரோதமான நடவடிக்கையாகவே அமையும்.மக்களவைத் தோ்தல் முடிவுக்குப் பிறகு அதிமுக ஒன்றுபடுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், அந்த விவகாரம் தனியாக விவாதிக்கப்பட வேண்டியது என்றாா்.