தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் – தமிழ்நாடு ஜனதாதளம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும், ஆடு வளர்ப்பு நலவாரியம் அமைத்திட வேண்டும், வனப்பகுதிகளில் ஆடுகள் மேச்சலுக்கு அனுமதிக்க வேண்டும், ஆடு திருடர்கள் மற்றும் குண்டர்களிடமிருந்து கால்நடைகளையும், கால்நடை வளர்ப்போரையும் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஜனதாதளம் மற்றும் தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு பாதுகாப்பு சங்கம் சார்பில் திருச்சி ஜங்ஷன் காதி கிராஃப்ட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஜனதாதளம் கட்சியினர் மற்றும் கால்நடை வளர்ப்போர் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

பின்னர் மாநில தலைவர் ராஜகோபால் செய்தியாளர்களிடம் பேசுகையில்…

தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாகவும், குற்றச்சம்பவங்கள் பெருகிவரும் மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழகத்தில் இட ஒதுக்கீடு பிரச்சனை மற்றும் ஜாதி மோதல்களை களைய சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்