திருச்சியில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த கே.எம்.சி மருத்துவமனை – அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு!
அகில இந்திய மறுமலர்ச்சி கழகத்தினர் நேற்றைய தினம், தலைவர் பொன் முருகேசன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில்….
திருச்சி தென்னூர் பகுதியில் கே.எம்.சி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு பின்புறம் பல ஆண்டுகளாக எஸ்.சி, எஸ்.டி சமூகத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு கார் பார்க்கிங் வசதி கிடையாது. மாநகராட்சி ஆணைப்படி மருத்துவமனையை சுற்றிலும் தீயணைப்பு துறை மற்றும் ஆம்புலன்ஸ் சென்று வர போதிய இடம் வேண்டும். ஆனால் அதற்கான இடங்கள் இல்லாததால் அங்கு வசிக்கும் எஸ்.சி, எஸ்.டி மக்களை ரவுடிகள் மூலம் அடித்து விரட்டி விட்டு அந்த இடத்தை குறைந்த விலைக்கு சட்டவிரோதமாக காவிரி மருத்துவமனை பத்திரப்பதிவு செய்துள்ளது. இதற்காக இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இவர்களாகவே தயாரித்து உள்ளனர். இது சம்பந்தமாக ஆர்டிஐ மூலம் கேட்டபோது இந்த பதிவுகள் எல்லாம் தவறானது என அறிக்கை தந்துள்ளனர். எனவே இது தொடர்பாக புகார் அளிக்க தில்லை நகர் காவல் நிலையம் சென்றோம். ஆனால் அவர்களும் மருத்துவமனைக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். எனவே சட்டவிரோதமாக செயல்படும் காவேரி மருத்துவமனை மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.