வடிகால் வாரி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சாமானிய மக்கள் நலக் கட்சியினர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மனு!
திருச்சி மாநகராட்சி 45, 46 வார்டுகளில் வடிகால் வாரி பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சாமானிய மக்கள் நலக் கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்
சாமானிய மக்கள் நலக்கட்சியின் விவசாய அணி மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமையில், ஊர் பொது மக்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது…
திருச்சி மாநகராட்சி 45, 46 வது வார்டுக்கு உட்பட்ட பொன்மலைப்பட்டி அடைக்கல மாதா கோவில் கொடிமரம் பின்பகுதியில் உள்ள வடிகால் வாரியை மாவடிகுளம் வரையிலும், அந்தோணியார் கோவில் பின்புறம் உள்ள வடிகால் வாரி பாதையையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழை காலங்களில் சென்னையை போல் அனைத்து வீடுகளிலும் மழைநீர் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வாகனங்களும் அந்த பகுதியில் செல்ல முடியாத இடையூறு உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் வடிகால் வாரி பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.