தமிழக பாஜகவின் மாநில செயலாளர் அஸ்வத்தம்மன் நாகை மாவட்டம் நாகூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,…
திருச்சி மக்கள் அனைவரும் நேற்று இரண்டு மணி நேரமாக பதட்டத்தில் இருந்தனர். பாதுகாப்பாக விமானத்தை தர இயக்கிய விமானிக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.
கும்மிடிப்பூண்டி அருகில் ரயில் விபத்து ஏற்பட்டதில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. 4பேர் ICU வில் இருந்தனர், அவர்களும் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர்.
தொடர்ச்சியாக இது போன்ற ரயில் விபத்துக்கள் நடப்பது சதி செயலா என்ற ரீதியில் NIA விசாரணை மேற்கொள்ள வேண்டும். சமீப காலமாக தண்டாவளங்களில் கல்லை வைத்து ரயிலை கவிழ்ப்பதற்கு ஈடுபடுவது போல வீடியோக்களை நாம் பார்த்து வருகிறோம். உலக அளவில் இந்தியாவின் ரயில்வே தரம் உயர்ந்துள்ளது. வந்தே பாரத் ரயில்கள் போல பெட்டிகள் வாங்குவதற்கு உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பாக உள்ள பெரியார் சிலையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். அந்த இடம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமானது.
திகா வினர் சொந்த காசில், சொந்த இடத்தில் அந்த சிலையை வைக்க வேண்டும். திராவிட கழகத்துக்கு முன்பாக திராவிடர் திடலுக்கு வருபவர்கள் மூளை குறைபாடு உள்ளவர்கள் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா.
வேட்டையன் திரைப்படத்தில் மெக்காலே கல்வி முறை வந்த பிறகுதான் இந்த நாட்டில் சமூகநீதி வந்தது என்ற கருத்து கூறப்படுகிறது. இது அறிவுக்கு ஒவ்வாத கருத்து. அடிமை மனோபாவம் கொண்ட கருத்து. அச்சில் இருப்பதுதான் அறிவு என்பதுதான் மெக்காலோ கல்வித் திட்டம். புதிய கல்விக் கொள்கை மூலமாக மாற்றி கேள்வி கேட்டு மாணவர் புரிந்து கொண்ட பின்பு தான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நாம் கொண்டு வருகிறோம்.
நீட் என்ற தேர்வு வந்த பின்பு தான் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராக வர முடிந்தது. இது போன்ற பிற்போக்கான கருத்துக்களை உச்சத்தில் இருக்கும் நடிகர் நடிக்கும் திரைப்படத்தில் பரப்புவது என்பது ஆபத்தானது. வெளிநாட்டு கார்ப்பரேட் இந்தியன் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிரான மனநிலையை தெரிவிப்பது ஆபத்தானது. மெக்காலே கல்விக்கு ஆதரவாக பேசுவது ஒரு பிற்போக்குத்தனமாகும் என தெரிவித்தார்.
பேட்டியின் போது திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
Comments are closed.