திருச்சியில் பல்சமய நல்லுறவு கிறிஸ்துமஸ் விழா!

திருச்சி புனித ஜான்பால் பல்சமய உரையாடல் மன்றம், தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சார்பில் கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய நல்லுறவு கிறிஸ்துமஸ் விழா நடந்தது. திருச்சி மேலப்புதூர் டி.இ.எல்.சி. தூய திருத்துவ பேராலய வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஜான்பால் பல்சமய உரையாடல் மன்ற இயக்குனர் சார்லஸ் வரவேற்றார். தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ், கிறிஸ்து பிறப்பு செய்தி வழங்கினார். தென் னிந்திய திருச்சபை திருச்சி-தஞ்சை திருமண்டல பேராயர் ஆணை யாளர் சுரேஷ்குமார், பனானா லீப் உணவகங்களின் உரிமையாளர் மனோகரன், ஜமால்முகமது கல்லூரி உதவி பேராசிரியர் ரஷிதாபே கம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். திருச்சி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் தலைமையுரையாற்றினார். மரியா வின் பிரான்சிஸ்கன் தூதுரையாளர் சபை-கோவா அருள்சகோதரி ஸ்டெல்லா பல்தார் சிறப்புரையாற்றினார். விழாவில் திருச்சி கத்தோ லிக்க மறைமாவட்ட முதன்மை குரு அந்துவான், சீக்கியர் நலச்சங்க தலைவர் அச்சர்சிங், பிரம்மகுமாரி தேவகி, ஜனாப்காதர் மீரா, பழந்தமிழ் காவிரி அறக்கட்டளையின் பாலசுப்ரமணியன், சி.எஸ்.ஐ.ஷீலா மார்கரெட் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் டி.இ.எல்.சி. பொருளாளர் ஞானப்பிரகாசம் நன்றி கூறினார்.

- Advertisement -

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்