சோழன் பார்வை இதழ் 2026 ஆம் ஆண்டு தமிழ் மாத காலண்டர் வெளியீட்டு விழா!
சோழன் பார்வை இதழ் 2026 ஆம் ஆண்டு தமிழ் மாத காலண்டர் வெளியீட்டு விழா!

சோழன் பார்வை இதழ் 2026 ஆம் ஆண்டு தமிழ் மாத காலண்டர் வெளியீட்டு விழா . திருச்சி கார்த்தி வைத்தியசாலா வளாகத்தில் நடைபெற்றது.சோழன் பார்வை இதழ் ஆசிரியர் வேல்முருகன் தலைமை வகித்தார். கார்த்திக் வைத்திய சாலா மருத்துவர் கார்த்திக், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் அனைத்தின் தேசிய மருத்துவர் சங்கம் அனைத்திந்திய மாற்றும் முறை மருத்துவ அகாடமி நிறுவனத் தலைவர் சுப்பையா பாண்டியன் பங்கேற்று பேசுகையில்,சோழன் பார்வை இதழ் தமிழ் மாத நாட்காட்டியில் ஒவ்வொரு நாளுக்குமான நேரங்கள்,ராகு காலம் & குளிகை, அன்றைய தினம் தவிர்க்க வேண்டிய நேரம்,நட்சத்திரம், திதி இந்து பஞ்சாங்கத்தின்படி நாள் பலன்களைக் குறிக்கிறது.அரசு விடுமுறைகள், இந்து,கிறிஸ்தவம், இஸ்லாம் பண்டிகைகள், சுபமுகூர்த்த கரிநாள் விவரங்கள், தேசிய சர்வதேச தினங்கள், விசேஷ நாட்கள்,சூரிய உதயம்,அஸ்தமனம் நேரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு இல்லத்திலும் சோழன் பார்வையில் மாத நாட்காட்டி இடம்பெற வேண்டும் என சோழன் பார்வை இதழ் தமிழ் மாத நாட்காட்டியை வெளியிட, சிறுப்பத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிமுருகன், சிறப்பு ஆசிரியர் பாரதி பொன்னுச்சாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். சோழன் பார்வை இதழ் சிறப்பு செய்தியாளர் பாலச்சந்தர், செய்தியாளர்கள் செரி சுகுமார், கார்த்திகேயன், இக்பால் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.


Comments are closed.