மீனவரின் வீட்டில் டீ குடித்தவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
மீனவரின் வீட்டில் டீ குடித்தவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட்டுகளில் ஒவ்வொரு கடையாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து லயன்ஸ் டவுன் பகுதிக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சூசை தப்பாசு என்ற மீனவர் வீட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.
அங்கு மீனவரின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து, குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரது வீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டீ குடித்தவாறு அவர்களிடம் வாக்கு கேட்டார். அப்போது முதலமைச்சர் கூறும்போது, கனி மொழி எம்.பி., உங்கள் வீட்டு பிள்ளை அவரை மறந்து விடாதீர்கள். பாராளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் அங்கிருந்து டவுன் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார்.