- Advertisement -

காவிரி, கொள்ளிடம் ஆற்றின் நீர் மேலாண்மை தேவை – திமுக அரசு விவசாயிகளை ஏமாற்றியதாக அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

- Advertisement -

தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின் ஒரு பகுதியாக 100 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (செப். 26) திருச்சி மாவட்டம் காவிரி ஆற்றில் இறங்கி, விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் டெல்டா பகுதி விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அன்புமணி ராமதாஸ் விவசாயிகளிடம் பேசுகையில்,…

22 மாவட்டங்கள் காவிரி ஆற்றை நம்பி இருக்கின்றன. தமிழ்நாட்டில் வாழும் 8 கோடி மக்களில் 5 கோடி மக்கள் காவிரியை சார்ந்துள்ளனர். காவிரி இயற்கை கொடுத்த வரம். ஆனால் அதை நாம் சரியாக பயன்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் பெய்யும் மழை நீரை ஒரு மாதத்தில் சேமித்தால், 11 மாதங்கள் பயன்படுத்தலாம்.

Vagai

2023-ல் 520 டிஎம்சி மழை நீர் கடலில் கலந்துவிட்டது. இந்த ஆண்டும் அதே நிலை தொடரும் சூழல் உள்ளது. தமிழகத்தில் நீர் சேமிக்க போதிய கட்டமைப்பு இல்லை. தமிழ்நாடு பட்ஜெட், நீர்ப்பாசன திட்டத்திலிருந்து தான் தொடங்க வேண்டும். விவசாயிகளுக்கு நீர், மண் பாதுகாப்பு, மரியாதையான விலை ஆகியவற்றை அரசு உறுதி செய்ய வேண்டும்.

Bismi

திமுக அரசு 2021 தேர்தலுக்கு முன் விவசாயிகளுக்கு 56 வாக்குறுதிகள் அளித்தது. அதில் வெறும் 8 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 48 வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளை திமுக அரசு ஏமாற்றியுள்ளது.

கர்நாடக அரசு 6 மாவட்ட விவசாயிகளுக்காக 77,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 15 லட்சம் ஏக்கர் நிலம் பயன்பெறும். ஆனால், நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு இதுபோன்ற ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. கொள்ளிடம் ஆறு 110 கி.மீ நீளமுடையது. ஒவ்வொரு 10 கி.மீக்கும் தடுப்பணைகள் கட்டினால், விவசாயிகளுக்கும் குடிநீர் பிரச்சினையும் தீரும். ஒரு மூட்டை நெல்லுக்கு (40 கிலோ) 40–60 ரூபாய் லஞ்சம் வசூலிக்கப்படுகிறது. 100 கிலோ நெல்லுக்கு 275 ரூபாய் வரை கொள்ளை அடிக்கப்படுகிறது. எடை குறைத்து பதிவு செய்வதும் நடைமுறையில் உள்ளது.

ஒடிசா: ஒரு குவிண்டால் நெல்லுக்கு ₹800, ஆந்திரா ஒரு குவிண்டால் நெல்லுக்கு ₹500, தமிழ்நாடு: ஒரு குவிண்டால் நெல்லுக்கு வெறும் ₹131. தமிழக அரசு கடந்த ஆண்டு 130 ரூபாய் கொடுத்தது. இப்போது பெரிய மனது வைத்து 1 ரூபாய் கூடுதலாக சேர்த்துள்ளது என்று அன்புமணி விமர்சித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்