- Advertisement -

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் அப்துல் கரீம் பேட்டி!

- Advertisement -

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்ற இம்நாட்டில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுலைமான், மாநில செயலாளர் சபீர் அலி, மாவட்ட தலைவர் குலாம் தஸ்தாஹீர் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாநில தலைவர் அப்துல் கரீம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…

Vagai

இஸ்லாம் குறித்த சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லாமல், நல்வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை இளைய சமுதயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றத்தில் தர்கா மற்றும் கோவில் விவகாரத்தை வைத்துக் கொண்டு தமிழகத்தில் பாஜக உள்ளிட்ட, சங்பரிவார் அமைப்புகள் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஹிந்து, முஸ்லிம் மக்களிடையே மத மோதலையும், வெறுப்பையும் உண்டாக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்ற வார்த்தை தேவையற்றது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு அவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் நீதிபதி இளந்திரையன் திருப்பரங்குன்றம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை. இது தமிழகத்தில் நல்லதல்ல, மக்களின் நல்லிணக்கத்தை கெடுக்கும் என்று கூறியுள்ளார், அனுமதி மறுத்துள்ளார்.

தமிழகத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை, பேரிடர் காலங்களிலும் முறையான நிவாரணம் தருவதில்லை. மத்திய அரசு நாங்கள் சொல்லும் கல்வித் திட்டத்தை கொண்டுவர வேண்டும் இல்லை என்றால் நிதி வழங்க மாட்டேன் என கூறுகின்றனர்.
மத்திய அரசு கல்வி உரிமையை பறிக்கும் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.

Bismi

புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொள்ளப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பதை கண்டித்த வாலிபர் அவரது நண்பர் படுகொலை
செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசும், காவல்துறையினரும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இஸ்லாமியர் எவ்வளவு என்று கண்டறிந்து அதற்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. முதல் படியாக 5 சதவீத இட ஒதுக்கீடு தரட்டும் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்