சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம் !- த.வெ.க.வை அழைத்த பா.ம.க

தமிழக வெற்றி கழகத்துடன் பா.ம.க. கூட்டணி வைக்க ஒரு அச்சாரமாக இருக்குமா?

சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம் !- த.வெ.க.வை அழைத்த பா.ம.க

Bismi

தமிழக வெற்றி கழகத்துடன் பா.ம.க. கூட்டணி வைக்க ஒரு அச்சாரமாக இருக்குமா?

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக போராட்டம் நடத்தவுள்ளது . இதில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாமக நீண்டநாட்களாக வைத்து வருகிறது. இதனை முன்னிட்டு வரும் டிசம்பர் 17ஆம் தேதி பாகம மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்க உள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க பல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தவெகவிற்கு அழைத்து விடுத்துள்ளது. இதற்கான அழைப்பு கடிதத்தை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு இன்று வழங்கினர். மேலும் தவெக சார்பில் விஜய் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தமிழக வெற்றி கழகத்துடன் பா.ம.க. கூட்டணி வைக்க ஒரு அச்சாரமாக இருக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.டிசம்பர் 17 அன்று சென்னை மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான திமுகவைத் தவிர்த்து மற்ற அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் பாமக அழைப்பு அனுப்பியுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்