பள்ளி மாணவர்களுக்கான வாள் விளையாட்டு போட்டி திருச்சியில் நடைபெற்றது!

0

17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான வாள் விளையாட்டு போட்டி திருச்சியில் நடைபெற்றது

திருச்சி மாவட்ட வாள் விளையாட்டு சங்கம் சார்பில் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வாள் விளையாட்டு போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் FOIL, EPEE, SABRE ஆகிய மூன்று பிரிவுகளில் 15 மாவட்டங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கான தமிழக அணியில் இடம் பெறுவர். தொடர்ந்து நாளை நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவில் GVN மருத்துவமனை டாக்டர் செந்தில் கலந்து கொண்டு பரிசளிக்க உள்ளார். மேலும் இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட வாள் விளையாட்டு சங்கத் தலைவர் டாக்டர் குமார், செயலாளர் டாக்டர் கங்கை மணி, துணை தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் ராஜ்குமார், செயல் உறுப்பினர்கள் அசாருதீன், இளம் பரிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து திருச்சி மாவட்ட வாள் விளையாட்டு சங்கத் தலைவர் டாக்டர் குமார் கூறுகையில்…

- Advertisement -

நாமக்கல், சேலம், சென்னை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இருப்பதை போன்று
திருச்சி மாவட்டத்திற்கு, வாள் விளையாட்டு போட்டிக்கான பயிற்சி மைதானமும், உபகரணங்களும் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்