பாஜக மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட பார்வையாளராக ஏ.எஸ்.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார், உண்மையான தொண்டனுக்கு கிடைத்த பரிசு கட்சியினர் புகழாரம்
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கு இளைஞர் அணி, மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள், துறை பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் ஒப்புதலின்பேரில் இளைஞரணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா அவர்கள் கட்சியின் நிர்வாகிகளை நியமித்துள்ளார்.

அதன்படி, மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட பார்வையாளராக ஏ.எஸ். கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், லால்குடி பகுதி சேர்ந்தவர், கடந்த 2019-2022 வரை திருச்சி புறநகர் மாவட்ட இளைஞரணி தலைவராகவும், அதனை தொடர்ந்து 2022-2025 வரை மாநில செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தவர். தற்போது 2026 ம் ஆண்டு வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தற்போது புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது, அந்த வகையில் கட்சிக்காக அயராது பாடுபட்ட உண்மையான தொண்டருக்கு பதவி வழங்கி உள்ளது, எங்களுக்கு கிடைத்த தீபாவளிக்கு பரிசு என உற்சாகம் பொங்க அக்கட்சியை சேர்ந்த பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
மேலும் பாஜக கட்சியை பொறுத்தவரை ஏ.எஸ்.கார்த்திகேயன் அனைவரிடமும், பண்பாகவும், பாசமாகவும், எளிமையாகவும் பழகக்கூடியவர். தான் சார்ந்த கட்சியின் கருத்தை, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும்படி, புரியும்படி பொதுமக்களிடத்திலும், ஊடகங்கள் மத்தியிலும் அழுத்தமாக பதிவுசெய்யக்கூடிய திறமை படைத்தவர் என்றும் கூறுகிறார்கள்.
தற்போது திருச்சி புறநகர் மாவட்ட பாஜக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் அவர் அலுவலகத்தில், சால்வைகள் அணிவித்தும், பூச்செண்டுகள் கொடுத்தும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Comments are closed.