திருச்சியில் புத்தகத் திருவிழா தொடக்கம்!
தமிழக அரசின் சார்பில் இரண்டாவது ஆண்டாக நடைபெறும் புத்தகத் திருவிழா, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து புத்தகத் திருவிழா சின்னத்தை வெளியிட்டு “தூரிகையில் திருச்சி” மற்றும் “தூய காற்றே” எனும் நூல்களை வெளியிட்டு விழா பேருரையாற்றினார்கள். இந்த புத்தகத் திருவிழாவானது 23 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், மத்திய மண்டல காவல் துறை துணைத் தலைவர் பகலவன், மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி மற்றும் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.