- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜயின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு, அக்கட்சியின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தவெக திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.

மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினர். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர் அணி சென்னை மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் ஆதித்ய சோழன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Vagai
Bismi

பின்னர் ஆதித்ய சோழன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜயின் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம். திருச்சி மாவட்டத்தில் இன்று 51 நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம். அதன் ஒருபகுதியாக திருச்சி அரசு மருத்துவமனையில் ரத்ததானம் வழங்கியுள்ளோம். 27வது ஆண்டாக நடைபெறும் இந்த ரத்ததான முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கியுள்ளோம் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில்
மாவட்ட தலைம நிர்வாகிகள்
அரியமங்கலம் மூர்த்தி, ராமச்சந்திரன், சீனி, ஈபி ரோடு சக்திவேல், போட்டோ விமல், காட்டூர் கதிர், வாளாடி ஆனந்த், ஏர்போர்ட் செந்தமிழ், உறையூர் சத்யராஜ், தீபக், மண்ணை மதுபாலன், பாலக்கரை மாசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்