பா.ஜ.க வின் வளர்ச்சி வேகமாக சென்று கொண்டுள்ளது – எங்கள் கூட்டணி தான் 2026 ல் மிகப்பெரிய வெற்றி பெறும் கூட்டணி – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

- Advertisement -

திருச்சியில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான பென்ஷன் முகாம் நடைபெற்று வருகிறது, இதில் கலந்துகொண்ட மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்…

திமுக மிகப்பெரிய தோல்வி பயத்தில் உள்ளார்கள். பயத்தோடு ஆட்சியை நடத்தி வருகிறார்கள். எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி திமுக வை வீட்டுக்கு அனுப்புவோம்.

முதலமைச்சர் செயல்படாததன் விளைவாக லாக்கப் மரணம் நடந்துள்ளது. காவல் நிலையத்திற்கே மக்கள் செல்ல அச்சப்படுகிறார்கள். முதலமைச்சர் செயல்படாததன் விளைவை மக்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

துறை அமைச்சர் என்கிற அடிப்படையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோ வை பார்க்க சென்றேன். துறை அமைச்சர் என்கிற ரீதியில் சினிமா துறை சார்ந்த பலரை சந்தித்துள்ளேன். சரத்குமார் அவருடைய கட்சியை கலைத்து விட்டு பா.ஜ.க வில் இணைந்தார். குஷ்பூவை சந்தித்த பின் அவர் பா.ஜ.க வில் இணைந்தார். மீனா பா.ஜ.க விற்கு வந்தால் வரவேற்க்க தக்கது. பா.ஜ.க வின் வளர்ச்சி வேகமாக சென்று கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி இயங்கும் என்பதை உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி விட்டார்.
கூட்டணி ஆட்சி குறித்து மாறுப்பட்ட கருத்து உள்ளதே என்கிற கேள்விக்கு இது குறித்து அமித் ஷா வும் எடப்பாடி பழனிச்சாமி யும் பேசி முடிவெடுப்பார்கள். எங்கள் கூட்டணி தான் 2026 ல் மிகப்பெரிய வெற்றி பெறும் கூட்டணி.

தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான் யார் முதல்வர் வேட்பாளர் என்பது முடிவெடுப்பது அவர்களின் பாடு இதில் நான் கருத்து கூற முடியாது. கூட்டணியில் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. குழப்பம் வெளியிலிருந்து வரவில்லை உள்ளுக்குள்ளே இருக்கிறதே என்கிற கேள்விக்கு எங்கும் குழப்பம் இல்லை என்றார். தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. இதில் அவசரம் வேண்டாம் நிதானத்தை கடை பிடியுங்கள்.

முதல்வரின் உத்தரவை எந்த அதிகாரிகளும் பின்பற்றுவதில்லை அதிகாரிகளின் ஆட்சி தான் தமிழ்நாட்டில நடக்கிறது. அவர் சரியாக செயல்படவில்லை. சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினால் என்ன நடத்தாவிட்டால் என்ன அதனால் எந்த பயனும் இல்லை.

லாக் அப் மரணம் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் வாய் திறக்கவில்லை. கூட்டணிக்காக தமிழக மக்களின் நலனை திமுக கூட்டணி கட்சிகள் அடகு வைத்து விட்டார்கள் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்