திருச்சி மாநகராட்சியை கண்டித்து பாஜகவினர் சங்கு ஊதும் போராட்டம்!

திருச்சி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மந்தகதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வரும் நிலையில், மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் மஞ்சள் காமாலை, டைபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு திருச்சி மாநகர மக்கள் ஆளாகி வருகின்றனர். மக்களின் உயிர் மீது அக்கறை இல்லாமல் சுத்தமான குடிநீர் வழங்க கூட முடியாத திராவிட மாடல் அரசையும், திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும், திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் பதவி விலக வேண்டும் என்பதனை வலியுறுத்தி திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர், மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

அப்போது போலீசார் சங்கினை பறித்து பாஜகவினரை அப்புறப்படுத்தி கைது செய்ய முற்பட்டதால், ஆத்திரமடைந்த பாஜகவினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மக்களுக்கான அடிப்படை வசதிகளை கூட செய்து தராத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்களுடன் ஆன போராட்டம் தொடரும் என பாஜகவினர் எச்சரிக்கை விடுத்தனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்