- Advertisement -

தமிழக முதல்வரை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!

- Advertisement -

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் கேரளா, கர்நாடகா மாநில தலைவர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து, தமிழகம் முழுவதும் பாஜகவினர் இன்று தங்கள் வீடுகளில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்த வேண்டும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.

அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக அலுவலகம் முன்பு, மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் இன்று கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து மற்றும் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலினை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Vagai
Bismi

தொடர்ந்து மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,..

தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசு, தமிழகத்திலே தொடர்ச்சியாக நாடகங்களை நடத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கலை துறையில் இருந்து வந்த காரணத்தினால் நாடகம் நடத்துவதில் குறியாக இருக்கிறார்கள்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளை மத்திய அரசு குறைக்க போவதாக பொய்யான குற்றசாட்டை திமுக முன்வைத்து, பல்வேறு மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வர்களை அழைத்து இன்று ஆதரவு தேடி கொண்டிருக்கிறார்கள்.

திமுக கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆட்சியில் இருக்கிறார்கள். அதற்காக இன்று நாடகத்தை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அந்த நாடகம் நீண்ட நாட்களுக்கு மக்கள் மத்தியில் எடுபடாது. நிச்சயமாக இந்த திமுக நாடக கம்பெனி கூடாரத்தை காலி செய்து விட்டு விரைவில் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை வரும் என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்