- Advertisement -

கட்ச தீவு விவாகாரத்தை வைத்து பா.ஜ.க தமிழகத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறது – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் இப்ராஹீம் திருச்சியில் பேட்டி!

0

- Advertisement -

கட்ச தீவு விவகாரத்தில் ஆர்.டி.ஐ ஃபைல் செய்த போது எத்தனையோ பேருக்கு எதுவும் கிடைக்கவில்லை – ஆனால் அண்ணாமலைக்கு மட்டும் கட்ச தீவு விவகாரத்தில் ஆர்.டி.ஐ எப்படி கிடைத்தது ? இது முற்றிலும் விதி மீறிய செயல் – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் இப்ராஹீம் திருச்சியில் பேட்டி
திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் இப்ராஹீம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…

 

 

 

 

Bismi
காங்கிரஸ் கட்சியின் பணம் முடக்கப்பட்டுள்ளது – காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து 135 கோடி சட்ட விரோதமாக அபகரித்துள்ளனர். இது முற்றிலும் பாஜகவின் பலி வாங்கும் செயல்.
இதே காலகட்டத்தில் 42 கோடி வசூலித்த பாஜகவிற்கு எந்த ஒரு வரி விதிப்பும் அபராதமும் இல்லை. ஜன நாயகத்தின் மீது செலுத்தப்பட்டுள்ள போர் – இந்தியா கூட்டணியின் வலிமையை குழைக்க பார்கின்றனர். ஜெர்மெனி நம் இந்தியாவிற்கு கண்டனம் தெரிவிக்கின்றனர் – ஐ.நா கேள்வி கேட்கிறது. ஆனால் எங்கள் உள்துறை விவகாரம் என்று பா.ஜ.க பதில் கூற மறுக்கிறது. லடாக்கில் 4 ஆயிரம் சதுர மீட்டர் நம் இடம் பறி போய் உள்ளது. இதை பற்றி ஏன் மோடி பேசுவதில்லை. கச்சத்தீவு விவகாரத்தில் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாமல் தற்போது தேர்தல் நேரத்தில் கையில் எடுத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.
கட்ச தீவு விவகாரத்தில் ஆர்.டி.ஐ file செய்த போது எத்தனையோ பேருக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அண்ணாமலைக்கு மட்டும் கட்ச தீவு விவகாரத்தில் ஆர்.டி.ஐ எப்படி கிடைத்தது ? இது முற்றிலும் விதி மீறிய செயல். கட்ச தீவு விவாகாரத்தை வைத்து பா.ஜ.க தமிழகத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறது. ஓட்டு வங்கிக்காக சமயம் பார்த்து பா.ஜ.க மற்றும் மோடி கட்ச தீவு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். 2024 காங்கிரஸ் ஆட்சியில் அமரும். கட்ச தீவு விவகாரத்தில் நல்ல முடிவை எடுப்போம். 75 ஆண்டுகளில் முதலமைச்சரை விசாரனைக்காக யாரும் கைது செய்யவில்லை. வரலாற்றில் நடக்காத விஷயங்களை நாம் பார்கின்றோம்.
கெஜ்ரிவால் கைது மிக பெரிய அரசியல் காழ்புனர்ச்சி. என்னிடத்தில் பணம் இல்லை – அதனால் தான் நான் தேர்தலில் போட்டியிடவில்லை.
நிர்மலா சீதாராமன் ஆந்திராவில் affidavitல் 2 கோடி இருப்பதாக தாக்கல் செய்துள்ளார் ? பிச்சை காரர் – பிச்சை காரர்கள் என்று எல்லாம் பேசும் நிர்மலா சீதாராமன் எப்படி மக்களை சந்திப்பார் – தேர்தலில் நிற்பார் என்றார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்