- Advertisement -

பைசன் (காளமாடன்) திரைப்படம் இந்த தலைமுறைக்கு தேவையான அற்புதமான படைப்பு! தமிழர் தேசம் கட்சி நிறுவனத் தலைவர் கே கே செல்வகுமார் புகழாரம் 

- Advertisement -

பைசன் (காளமாடன்) திரைப்படம் இந்த தலைமுறைக்கு தேவையான அற்புதமான படைப்பு! தமிழர் தேசம் கட்சி நிறுவனத் தலைவர் கே கே செல்வகுமார் புகழாரம்

பைசன் (காளமாடன்) திரைப்படம் குறித்து தனது சமூக வலைதளத்தில் தனது அறிக்கை வெளியிட்டிருந்தார் அதில், சகோதரர் திரு.மாரிசெல்வராஜ் அவர்களின் பைசன் (காளமாடன்) திரைப்படம் இந்த தலைமுறைக்கு தேவையான அற்புதமான படைப்பு! வெல்லட்டும் பைசன் காளமாடன்!!

 

Vagai

பைசன் காளமாடன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தேன். சாதிய திரைப்படம் என பைசன் விமர்சிக்க பட்ட நிலையில், இந்த திரைப்படத்தை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பம் முதல் இறுதி வரை எவ்வித இடையூறுகளுக்கும் இடமளிக்காமல் முழுக்க முழுக்க திரைப்படத்தின் மீது கவனத்தை வைத்திருக்கும் படியாக கதைக்களம் அமைந்திருந்தது.

 

Bismi

தென் மாவட்டத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து, மிகப்பெரிய பகையினால் ஏற்பட்ட மோதலுக்கும், சாதிய சிக்கலுக்கும் மத்தியில், தனது இலட்சியத்தை அடையும் ஒரு இளைஞனின் போராட்டத்தை, தமிழரின் வீரவிளையாட்டான கபடி மூலம் உணர்வுபூர்வமாக அனைவரது மனதிலும் சகோதரர் திரு.மாரிசெல்வராஜ் அவர்கள் விதைத்துள்ளார் என்றால் மிகையாகாது.

 

தாய்க்கு நிகரான சகோதரியின் அன்பையும், ஒரு தந்தையின் நம்பிக்கை எந்தளவிற்கு ஒரு பிள்ளை தனது லட்சியப் பாதையை அடைய உறுதுணையாக இருக்கும் என்பதனையும், இந்த திரைப்படத்தின் மூலம் சகோதரர் திரு.மாரிசெல்வராஜ் அவர்கள் இந்த சமூகத்திற்கு காட்சிபடுத்தியிருக்கிறார்.

 

சாதிக்க துணிந்தால், எத்தனை பெரிய வேலி போட்டாலும் தன்னம்பிக்கையால் அதனை தகர்த்து விடலாம் என்பதனை மிக தெளிவாகவும், நேர்த்தியாகவும் பைசன் மூலம் காட்சி படுத்தியுள்ளார். இத்திரைபடத்தில் நடித்துள்ள கலைஞர்கள் அனைவரும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர். இந்த தலைமுறைக்கு தேவையான அற்புதமான படைப்பை தந்த சகோதரர் திரு.மாரிசெல்வராஜ் அவர்களையும், படக்குழுவினரையும் மனதார வாழ்த்துகிறேன்.

 

பிறப்பால் அனைவரும் சமம் என்ற பாண்டியராஜக்களின் நெஞ்சுரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்! வெல்லட்டும் பைசன் காளமாடன்!! என்று குறிப்பிட்டு இருந்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்